தோனியின் மாஸ் ரீ-என்ட்ரி! மைதானத்திற்கு வரும் முன்பே தல என்ன பன்றாருன்னு பாருங்க....... வைரலாகும் வீடியோவால் குஷியில் துள்ளும் ரசிகர்கள்!!!



ms-dhoni-bat-preparation-ipl-2026-csk-vs-mi

ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முக்கியமான போட்டிக்கு முன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மகேந்திர சிங் தோனி மீண்டும் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையில், அவர் தனது பேட்டை தயார் செய்வது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மீண்டும் களமிறங்குவாரா தோனி?

தசைநார் காயம் காரணமாக இந்த சீசனின் முதல் ஆறு போட்டிகளில் விளையாடாமல் இருந்த தோனி, ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறும் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் திரும்புவார் என கூறப்படுகிறது. அணியின் நடப்பு நிலையை கருத்தில் கொண்டு, அவரது வருகை அணிக்கு உற்சாகம் தரும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

வைரலாகும் பேட் செதுக்கும் வீடியோ

இந்நிலையில், தோனி ஒரு மின்சார கருவியை பயன்படுத்தி தனது பேட்டின் பின்புறத்தை செதுக்கி மெருகேற்றும் காட்சி அடங்கிய தோனி பேட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. போட்டிக்கு முன் அவர் தீவிரமாக தயாராகிக் கொண்டிருப்பது இதில் தெளிவாக தெரிகிறது.

இதையும் படிங்க: மரண பீதியாகும் காட்சி! ரயிலுக்குள் சிங்கம் பாய்ந்து தாய் மற்றும் குழந்தையை இழுத்து சென்று கொடூர தாக்குதல்.. அதிர்ச்சி வீடியோ..!!

புதிய விதிகள் – வீரர்கள் முன்னெச்சரிக்கை

இந்த சீசனில் அறிமுகமான புதிய விதிகளின்படி, ‘பேட் கேஜ்’ சோதனையில் தேர்ச்சி பெறும் பேட்டுகளை மட்டுமே பயன்படுத்த அனுமதி உள்ளது. பல வீரர்கள் இந்த சோதனையில் சிக்கிய நிலையில், தோனி முன்கூட்டியே தனது பேட்டை விதிகளுக்கு ஏற்ப மாற்றி தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். இதனால், IPL 2026 போட்டியில் அவர் களமிறங்கும் தருணம் ரசிகர்களிடையே மேலும் ஆவலை கிளப்பியுள்ளது.

 

இதையும் படிங்க: டேய்.. பொறுமைக்கும் ஒரு அளவு இருக்குடா! ஆட்டை தொடர்ந்து துன்புறுத்திய சிறுவன்! ஆடு கொடுத்த பதிலடி.. வைரலாகும் வீடியோ.!! !