இந்தியா விளையாட்டு

இயற்கை விவசாயி ஆக உருவெடுக்கும் தோனி! அவரது பிறந்தநாளை எப்படி கொண்டாடினார் தெரியுமா?

Summary:

ms Dhoni as a formar

பல சாதனையை செய்திருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி நேற்று தனது 39 வது பிறந்தநாளை கொண்டாடினார். இளம் கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் பிடித்த கிரிக்கெட் வீரர் என்றால் அது மகேந்திர சிங் தோனி தான். ஆரம்பத்திலேயே வித்தியாசமான ஹேர் ஸ்டைலால் ரசிகர்களைக் கவர்ந்தவர். 

வெறும் வெளித் தோற்றத்தோடு நின்று விடாமல், ஹெலிகாப்டர் ஷாட், விக்கெட் கீப்பிங் என கிரவுண்டில் எதிர் அணியை துவம்சம் செய்தவர். தோனி கீப்பர் நிற்கிறார் என்றாலே பேட்ஸ்மேன்களுக்கு சற்று பயமாக தான் இருக்கும். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ‘கேப்டன் கூல்’ என ரசிகர்களால் எப்போதும் அழைக்கப்படுபவர் தல தோனி. 

தோனி பிறந்த நாளை, ஹேஸ்டேக் போட்டே ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிட்டனர். இந்தநிலையில் தோனி அவரது பண்ணை வீட்டில் இயற்கை விவசாயம் செய்துகொண்டிருக்கிறார். 39வது பிறந்த தினத்தை இன்று அவர் தனது குடும்பத்தினருடன் மிக எளிமையாக கொண்டாடி இருக்கிறார். அதேசமயம் தனது பண்ணை வீட்டில் உள்ள 40 முதல் 50 ஏக்கர் வரையிலான விவசாய நிலத்தில் இயற்கை முறைப்படி, பப்பாளி மற்றும் வாழை உள்ளிட்டவற்றை பயிரிட்டு வளர்த்து வருகிறார். 

அதுமட்டுமின்றி இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உரத்தின் மூலமே தனது இடத்தில் தோனி விவசாயம் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டிராக்டர் ஒன்றை தோனி ஓட்டிய வீடியோ வெளியானது. அத்துடன் செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளில் இருக்கும் ஆபத்து குறித்தும், இயற்கை விவசாயத்தின் நன்மை குறித்தும் தோனி விளக்கியிருந்தார். 


Advertisement