இந்தியா விளையாட்டு

புதிய அவதாரம் எடுக்கும் தல தோனி.! யாரும் எதிர்பார்க்காத வகையில் ரசிகர்களுக்கு தோனி கொடுத்த இன்ப அதிர்ச்சி!

Summary:

MS Dhoni as a coach in online

இந்திய அணியில் திடீரென அதிக படியான ரசிகர்களை கவர்ந்தவர் தான் தோனி. இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் கடைசியாக சர்வதேச போட்டியில் ஆடி இருந்தார். உலகக்கோப்பை தொடரின் அரை இறுதி தான் அவரின் கடைசி போட்டி. அதன் பின் அவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவில்லை.

பிசிசிஐ அவரை வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கியது. அதைத் தொடர்ந்து தோனி 2020 ஐபிஎல் தொடரில் ஆட தீவிர பயிற்சி மேற்கொண்டு இருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் நடத்திய பயிற்சி முகாமில் அவர் கலந்து கொண்டு பயிற்சி செய்தார். ஆனால் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த  2020 ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தோனி ஊரடங்கு காரணமாக தன் சொந்த ஊரான ராஞ்சியில் குடும்பத்துடன் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் ஆன்லைன் கிரிக்கெட் பயிற்சி அகாடமி துவங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தோனி 2017இல் துபாயில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை துவக்கினார். அது ஒப்பந்த பிரச்சனை காரணமாக தற்போது மூடப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில், இந்த ஊரடங்கு நேரத்தில் ஆன்லைன் அகாடமி மூலம் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. தோனியின் பிராண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனமான ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மூலம், இந்த இணையம் வழியான கிரிக்கெட் பயிற்சி அகாடமி துவங்கவுள்ளது என தெரிவிக்கின்றனர்.


Advertisement