குழந்தை இயேசு சிலைக்கு கால்பந்து அணியின் உடை.! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

குழந்தை இயேசு சிலைக்கு கால்பந்து அணியின் உடை.! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!


mexican soccer kit

கத்தாரில் 2022ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 32 அணிகள் இதில் விளையாடி வருகின்றன. உலகமெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள், தங்கள் அணி வெற்றி பெற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றைய ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதியதில் சவுதி அரேபியா 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்தது. வரலாற்று வெற்றியை பதிவு செய்த சவுதி அரேபியாவில் இந்த வெற்றியை சிறப்பிக்கும் விதமாக சவுதி அரசு இன்று அந்நாட்டில் பொது விடுமுறை அறிவித்துள்ளது. 


சுமார் 50 ஆண்டுகளாக மெக்ஸிகோ நாட்டின் ரசிகர்கள் தங்கள் அணி வெற்றி பெற, கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் வழக்கத்தை கொண்டுள்ளனர். அந்த வகையில், மெக்ஸிகோ நாட்டில் உள்ள தேவாலயங்களில் குழந்தை இயேசு சிலைக்கு, கால்பந்து ரசிகர்கள் தங்களது அணியின் சீருடையை அணிவித்து பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதுதொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.