சச்சினை விட வெஸ்ட் இண்டீஸ் அணியின் அந்த வீரருக்கு பந்து வீசுவது தான் கடினம்! மெக்ராத் ஓப்பன் டாக்!

சச்சினை விட வெஸ்ட் இண்டீஸ் அணியின் அந்த வீரருக்கு பந்து வீசுவது தான் கடினம்! மெக்ராத் ஓப்பன் டாக்!


Mecrath talk about sachin and lara

தெண்டுல்கரைவிட லாராவுக்கு பந்துவீசுவதே கடினமாக இருந்ததாக ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் கூறியுள்ளார்.

உலகின் தலைச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர், ஆஸ்திரேலியாவின் கிளைன் மெக்ராத். 50 வயதான இவர் 124 டெஸ்டுகளில் விளையாடி 563 விக்கெட்டுகளும், 250 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 381 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். 

sachin

இந்த நிலையில், பிரபல விளையாட்டு ஊடகம் மெக்ராத்திடம் சில கேள்விகளை கேட்டுள்ளது. அதில், நீங்கள் பந்து வீசக் கடினமாக உணர்ந்த பேட்ஸ்மென் யார் என்ற கேள்வி கிளைன் மெக்ராத்திடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மெக்ராத், இந்த விஷயத்தில் நான் லாராவைத்தான் குறிப்பிடுவேன், இதை என் அனுபவத்திலிருந்து கூறுகிறேன். ஆனால் ஹாட்ரிக் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அந்த விருப்பப் பட்டியலில் லாரா, சச்சின், டிராவிட் விக்கெட்டுகளை விரும்புவேன் என கூறியுள்ளார்.

அதேபோல், சர்வதேச கிரிக்கெட்டில் தற்போதைய பவுலர்களில் முழுமையான ஒரு வேகப்பந்து வீச்சாளர் யார்? என மெக்ராத்திடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மெக்ராத், ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ். அவர் பந்து வீசும் விதம் எனக்கு பிடிக்கும் என தெரிவித்தார்.