விளையாட்டு

மோசமான பீல்டிங்கிலும் தரமான சம்பவம் செய்த ஜடேஜா, தல தோனி! வீடியோ

Summary:

Maxwell runout by dhoni and jadeja

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று ராஞ்சியில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலியா அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஆஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பின்ச் மற்றும் கவாஜா இந்திய அணியின் பந்துவீச்சை ஆரம்பம் முதலே விளாச துவங்கினர். இந்திய அணியின் பீல்டிங் இன்றைய ஆட்டத்தில் மிகவும் மோசமாக இருந்தது. ஆரம்பத்திலேயே கவாஜா கொடுத்த கேட்சை தவான் கோட்டைவிட்டார்.

அவரைத் தொடர்ந்து ரோகித் சர்மா,  விஜய் சங்கர், ராயுடு, ஜடேஜா, கோலி என அனைத்து வீரர்களுமே பல முறை பந்தினை பிடிக்க தடுமாறினர். இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு இலவசமாகவே பல ரன்களை இந்திய வீரர்கள் விட்டுக்கொடுத்தனர்.

ஆனால் அப்படிப்பட்ட நிலைமையிலும் தல தோனி மட்டும் அனைவரின் பாராட்டையும் பெறும் அளவிற்கு தரமான ரன் அவுட் ஒன்றை செய்தார். அதுவும் ஃபுல் பார்மில் இருந்த மாக்ஸ்வெல்லின் விக்கெட். இதற்கு சமயோஜிதமாக செயல்பட்ட ஜடேஜாவையும் பாராட்டியே தீர வேண்டும். 

குலதீப் யாதவ் வீசிய 43 ஆவது ஓவரில் ஷான் மார்ஷ் அடித்த அருமையான ஷாட்டை ஜடேஜா சிறப்பாக தடுத்து நிறுத்தினார். ஆனால் அதற்குள் மார்ஷ் மற்றும் மேக்ஸ்வெல் ஒரு ரன் ஓடுவதறற்கு முயற்சித்தனர். ஆனால் பந்தை பிடித்த ஜடேஜா பவுலர் முனைக்கு தான் வீசுவார் என மேகஸ்வெல் எதிர்பார்க்க, தீடீரென கீப்பர் தோனியிடம் வீசினார். மேகஸ்வெல் கிரீஸ் அருகே நெருங்கிவிட்டதை உணர்ந்த தோனி ஸ்டம்பிற்கு மேலே வந்த பந்தை பிடிக்காமல் கையால் தேக்கி ஸ்டம்பில் விழுமாறு செய்தார். 

வீடியோவ பாருங்க நீங்களே அசந்துருவீங்க. 

 


Advertisement