அவேஸ்கானின் ஆவேசம்.! ஜேசன் ஹோல்டரின் அட்டகாசம்.! கடைசி ஓவரில் சரிந்துவிழுந்த சன்ரைசர்ஸ்.!lucknow-team-beat-sunrisers-hyderabad


ஐபிஎல் கிரிக்கெட் சீசன் கடந்த மாதம் 15-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று  நடைப்பெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ அணிகள் மோதின.

நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது . இதனால் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

லக்னோ அணியில் சிறப்பாக பந்துவீசிய ஆவேஷ் கான் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார். ஜேசன் ஹோல்டர் 34 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார்.