ஆப்கானிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிரபல கிரிக்கெட் வீரர்! உற்சாகத்தில் ஆப்கன் ரசிகர்கள்



lance klusner appointed as afhgan cricket coach

சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டியில் வளர்ந்துவரும் நாடுகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது ஆப்கானிஸ்தான். அந்த அணியில் பல திறமையான வீரர்கள் உருவாகி வருகின்றனர். உலகின் முன்னணி அணிகளையும் அச்சுறுத்தும் வகையில் சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணி உருவாகி உள்ளது.

இந்த அணியின் பயிற்சியாளராக இருந்து வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் பில் சிம்மன்ஸ் கடந்த உலகக் கோப்பையுடன் ஓய்வு பெற்றார். இவருக்கு பதிலாக தற்பொழுது தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் லேண்ஸ் க்ளுஸ்னர் புதிய பயிற்சியாளராக ஆப்கானிஸ்தான் அணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

afganisthan cricket

லான்ஸ் குளூஸ்னர் தென் ஆப்பிரிக்கா அணிக்காக 49 டெஸ்ட் போட்டிகளிலும் 171 ஒருநாள் போட்டிகளிலும் 1996 முதல் 2004ஆம் ஆண்டு வரை விளையாடி உள்ளார். அந்த காலகட்டத்தில் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தார் லான்ஸ் குளூஸ்னர்.

"அதிகமாக தனித்திறமை கொண்ட வீரர்கள் ஆப்கானிஸ்தான் அணியில் உள்ளனர். அவர்களை மேலும் வலுப்படுத்தி ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியை அடுத்த கட்டத்திற்கு நிச்சயம் எடுத்துச் செல்வேன்" என குளூஸ்னர் தெரிவித்துள்ளார். மேலும் தலைசிறந்த ஆல்ரவுண்டர் ஒருவர் தங்களது அணிக்கு பயிற்சியாளராக கிடைத்திருப்பதை எண்ணி ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.