விளையாட்டு

"நேருக்கு நேர் சந்திக்க தயார்" ரபடாவின் கேலிப்பேச்சுக்கு விராட் கோலி பதிலடி

Summary:

kohli replies to rabada on immature comment

உலகக் கோப்பை தொடரில் நாளை இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளும் சூழலில் தன்னை கேலியாக பேசிய ரபடாவை நேருக்கு நேர் சந்திக்க தயார் என கோலி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி நாளை தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. தென்னாப்பிரிக்கா ஏற்கனவே ஆடிய இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியை தழுவியுள்ளது. மேலும் அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டெயின் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். இது அந்த அணிக்கு பெரும் சரிவை கொடுத்துள்ளது.

rabada and kohli க்கான பட முடிவு

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபடா, கோலி பக்குவம் இல்லாதவர் என தெரிவித்தார். இதுகுறித்து பேசியிருந்த ரபடா, "கோலி ஒரு சிறந்த வீரர் தான். ஆனால் மைதானதத்தில் அவர் நடந்துகொள்ளும் விதம் அவருக்கு பக்குவம் இல்லாததையே காட்டுகிறது. எதிரணி வீரர்களை அவர் பலமுறை  செய்கைகளால் காயப்படுத்துகிறார். ஆனால் அதே சமயம் அவரை யாராவது காயப்படுத்தினால் அவரால் தாங்கிகொள்ள முடியவில்லை. 

நாம் பிறரை காயப்படுத்தும் போது, நாமும் அதனை ஏற்றுக்கொள்ள பக்குவப்பட வேண்டும். ஆனால் கோலியிடம் அது சுத்தமாக இல்லை. ஐபிஎல் தொடரில் எனது பந்தில் பவுண்டரி அடித்ததும் ஏதோ முனுமுனுத்தார். ஆனால் அப்போது நான் அமைதியாக தான் இருந்தேன். அதே சமயம் நான் அவரிடம் கடிந்துகொண்டால் மட்டும் ஏன் அவர் கோபப்படுகிறார் எனத் தெரியவில்லை" என்று ரபடா கூறியிருந்தார்.

rabada and kohli க்கான பட முடிவு

ரபடா இவ்வாறு பேசி இருந்தது கோலிக்கு நேற்று வரை தெரியாது போல. எனவே இதனை நாட்கள் அமைதியாகவே இருந்தார் கோலி. இந்நிலையில் நாளைய ஆட்டம் குறித்து கோலி இன்று அளித்த பேட்டியின் போது, ரபடா கோலி குறித்து கூறிய கருத்து பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள கோலி, "நான் பலமுறை ரபடாவிற்கு எதிராக அடியுள்ளேன். அவரை நேருக்கு நேர் சந்தித்து ஆலோசிக்க தயாராக உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.


Advertisement