மளிகைப்பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு; நடுத்தர வர்க்கத்தினர் கவலை.!

மளிகைப்பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு; நடுத்தர வர்க்கத்தினர் கவலை.!



Grocery Items Price Hike 

 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்த தங்கத்தின் விலை முதல், அத்தியாவசியமாக பயன்படுத்தும் காய்கறிகள், மளிகை பொருட்கள் போன்றவற்றின் விலை வரை பல உச்சம்தொட்டு வருகின்றன. சமீபத்தில் கடந்த வாரம் வரை கிலோ ரூ.900 க்கு விற்பனை செய்யப்பட்ட ஏலக்காய், அதன் உற்பத்தி குறைவு காரணமாக ரூ.3000 வரை உயர்ந்துள்ளது. 

இந்த நிலையில், பல அத்தியாவசிய மளிகைப்பொருட்களின் விலை கடந்த இரண்டு மாதத்தில் பன்மடங்கு உயர்ந்து இருப்பது தெரியவந்துள்ளது. இந்த விலை வரும் மாதத்திலும் உயரும் என கணிக்கப்பட்டுள்ளதால், நடுத்தர வர்கத்தின் நிலை மேலும் கவலைக்கிடமாகும் வகையில் அமைந்துள்ளது.

அந்த வகையில், மிளகு ரூ.640 க்கும், சீரகம் ரூ.380 க்கும், மிளகாய் தூள் ரூ.310 க்கும், மஞ்சள் தூள் ரூ.222 க்கும், துவரம் பருப்பு ரூ.170 க்கும், சோம்பு ரூ.170 க்கும், உளுந்தம் பருப்பு ரூ.148 க்கும், வெள்ளை சுண்டல் ரூ.148 க்கும், பாசிப்பருப்பு ரூ.120 க்கும், அசைபட்டாணி ரூ.100 க்கும், கருப்பு சுண்டல் ரூ.100 க்கும், சர்க்கரை ரூ.48 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த பிப்ரவரி மாதம் விற்பனை செய்யப்பட்ட மேற்கூறிய பொருட்கள் அனைத்தும் குறைந்தது ரூ.10 முதல் ரூ.60 வரை உயர்ந்து இருக்கிறது.