புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
கேலோ இந்தியா போட்டியில், ஹரியானவை வீழ்த்தி தங்கம் வென்றது தமிழ்நாடு.! மகிழ்ச்சி செய்தி.!
ஆறாவது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள், முதல் முறையாக தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. சென்னை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் உள்ள பல்வேறு மைதானங்களில் இப்போட்டிகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்திய அளவில் 5500 வீரர்-வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் கலந்துகொள்ளும் இப்போட்டியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தற்போது கேலோ இந்தியா போட்டியில், ஆடவருக்கான வாலிபால் பிரிவில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றுள்ளது. தொடக்கத்தில் இருந்து ஒரு தோல்வி கூட அடையாமல் முன்னிலையில் இருந்த தமிழ்நாடு வாலிபால் அணி, இறுதிப்போட்டியில் ஹரியானவை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய தமிழ்நாடு அணி 3 - 1 என்ற செட் கணக்கில் முன்னிலை பெற்று, ஹரியானா அணியை வீழ்த்தி, தங்கப்பதக்கம் பெற்று வெற்றி வாகை சூடியது.