விளையாட்டு

சென்னை அணி வீரர் கேதர் ஜாதவ் இதுவரை அடித்த அதிகாட்ச ரன்கள் எவ்வளவு தெரியுமா?

Summary:

கொரோனா காரணமா தள்ளிவைக்கப்பட்டிருந்த ஐபில் போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

கொரோனா காரணமா தள்ளிவைக்கப்பட்டிருந்த ஐபில் போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

ஐபில் 2020:
இதுவரை 22 போட்டிகள் முடிந்துள்ளநிலையில் இன்றைய போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. தற்போதைய நிலவரப்படி மும்பை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும், டெல்லி அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணி 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்:
இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே சென்னை அணி வெற்றிபெற்றுள்ளது. தொடக்கத்தில் சென்னை அணியின் ஓப்பனிங் மிக மோசமாக இருந்தநிலையில் சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்தது. ஆனால் கடந்த இரண்டு போட்டிகளில் சென்னை அணியின் தொடக்க வீரர்களின் ஆட்டம் மிக அபாரமாக உள்ளது.

ஆனாலும் கடந்த போட்டியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியிடம் தோல்வி அடைந்தது.

கேதர் ஜாதவ்:
கடந்த போட்டியில் சென்னை அணி தோல்வியடைய சென்னை அணி வீரர் கேதர் ஜாதவ்தான் காரணம் என சென்னை அணி ரசிகர்கள் புகார் கூறி வருகின்றனர். காரணம் மிகவும் அதிரடியாக விளையாடவேண்டிய நேரத்தில் கேதர் ஜாதவ் டெஸ்ட் போட்டியில் விளையாடியதுபோல் ஆடியதும், குறைவான ஸ்கோர் எடுத்ததுமே காரணாம்.

இதுவரை ஒரு போட்டியில் கூட சரியாக விளையாட அவரை ஏன் இன்னும் அணியில் வைத்துளீர்கள்? அவருக்கு பதில் இளம் வீரர் யாருக்காவது வாய்ப்பு கொடுக்கலாமே என்ற கேள்வி பலரின் மனதில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

கேதர் ஜாதாவின் அதிகபட்ச ரன்கள்:

இப்படி ரசிகர்களின் விமர்சனத்துக்கு உள்ளாகிவரும் கேதர் ஜாதவ் இதுவரை எத்தனை ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடியுள்ளார்? அவர் அடித்த அதிகபட்ச ரன்கள் எவ்வளவு என்ற தகவலும் தற்போது வைரலாகிவருகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டுமுதல் இந்திய அணிக்காக விளையாடிவரும் கேதர் ஜாதவ் இதுவரை 73 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒரு போட்டியில் இவர் அடித்த அதிகபட்ச எண்ணிக்கை 120 ரன்கள். அதேபோல் 9 T20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் ஒரு போட்டியில் அடித்த அதிகபட்ச எண்ணிக்கை 58.

கேதர் ஜாதவ் ஐபில் கேரியர்:
கடந்த 2010 ஆம் ஆண்டுமுதல் ஐபில் போட்டிகளில் விளையாடிவரும் இவர் இதுவரை 85 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2010 ஆம் ஆண்டு டெல்லி அணிக்காக விளையாடிய இவர் அடுத்த ஆண்டு கொச்சி அணிக்காக விளையாடியுள்ளார். பின்னர் 2013–2015 முதல் மீண்டும் டெல்லி அணிக்காக விளையாடிவந்த கேதர் ஜாதவ் 2016–2017 முதல் பெங்களூர் அணியில் விளையாடியுள்ளார்.

கடந்த 2018 முதல் தற்போதுவரை சென்னை அணிக்காக விளையாடிவருகிறார் கேதர் ஜாதவ். இதுவரை 85 ஐபில் போட்டிகளில் விளையாடியுள்ள கேதர் ஜாதவ், ஒரு போட்டியில் அடித்த அதிகபட்ச ரன்கள் எண்ணிக்கை 69.


Advertisement