விளையாட்டு

நேற்று தோனியின் சீருடையுடன் ஃபோட்டோ எடுத்த எதிரணி வீரர்! வைரலாகும் புகைப்படம்!

Summary:

ராஜஸ்தான் அணி வீரர் பட்லர் சென்னை அணியின் கேப்டன் தோனியின் சீருடையை கையில் வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

ராஜஸ்தான் அணி வீரர் பட்லர் சென்னை அணியின் கேப்டன் தோனியின் சீருடையை கையில் வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் அடித்தது. 126 என்ற எளிமையான இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி மிகவும் நிதானமாக ஆடி 17.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 126 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது.

இந்த தோல்வியின் மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றுள்ளது. மேலும் நேற்றைய போட்டியில் விளையாடியதன் மூலம், முதல் 200 ஐபில் T20 போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார். இந்நிலையில் தோனியின் சீருடையை ராஜஸ்தான் அணி வீரர் ஜோஸ் பட்லர் கையில் ஏந்தியவாறு எடுத்துக்கொண்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

தோனி 200 வது ஐபில் போட்டியில் உடுத்திய சீருடை என்பதால், தோனியின் தீவிர ரசிகரான ஜோஸ் பட்லர் அந்த சீருடையை பெற்றுக்கொண்டதாக ஒரு தகவல் பகிரப்பட்டுவருகிறது.


Advertisement