இந்த தலைமுறையின் சிறந்தவர்களில் ஒருவர் நீங்கள்.! புகழ்ந்து தள்ளிய ஜெயவர்த்தனே.!

இந்த தலைமுறையின் சிறந்தவர்களில் ஒருவர் நீங்கள்.! புகழ்ந்து தள்ளிய ஜெயவர்த்தனே.!



jayawardane talk about joe root

இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த டெஸ்டில் இங்கிலாந்து அணியில் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 115 ரன்கள் குவித்தார்.  இந்தப் போட்டியில் சதம் அடித்த ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் இணைந்தார்.

டெஸ்ட் போட்டி விளையாட ஆரம்பித்து 9 ஆண்டுகளிலேயே 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் இணைந்து அபார சாதனை படைத்தார் ஜோ ரூட். அதேபோல் 31 வயதில் 10 ஆயிரம் ஓட்டங்கள் எடுத்து அலஸ்டையர் குக்கின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்தார். இந்த நிலையில், ஜோ ரூட்டின் சாதனையை முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

அந்தவகையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் மஹேல ஜெயவர்த்தனே அவரது ட்விட்டர் பக்கத்தில் ஜோ ரூட்டை பாராட்டி பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், 10 ஆயிரம் ஓட்டங்கள் கிளப்பில் இணைந்ததற்கு வாழ்த்துக்கள் ரூட். நேற்று உங்களுடையது அற்புதமான ஆட்டம். இந்த தலைமுறையில் உண்மையிலேயே சிறந்தவர்களில் ஒருவர் நீங்கள். மிக வேகமாக வேலை செய்கிறீர்கள் என தெரிகிறது, சிறப்பாக முடித்தீர்கள் நண்பரே என தெரிவித்துள்ளார்.