ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கேயின் வெற்றி ரகசியம் குறித்து வாய் திறந்துள்ள தல தோனி.!

ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கேயின் வெற்றி ரகசியம் குறித்து வாய் திறந்துள்ள தல தோனி.!


ipl2019 - ipl history - csk won secreat - thala dhoni

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 40 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் சென்னை மற்றும்  ஹைதராபாத் அணிகள் நேற்று மோதின. சென்னையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோணி கைதராபாத் அணியை பேட் செய்ய அழைத்தார்.

முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். ஹைதராபாத் அணி சார்பாக மனிஷ் பாண்டே 83 ஓட்டமும், வார்னர் 57 ஓட்டமும் எடுத்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 175 ஓட்டம் எடுத்தது.

IPL 2019

76 ஓட்டம் என்ற சற்று கடினமான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் அதிரடி வீரர் டுப்ளஸி தொடக்கத்திலையே ஆட்டம் இழந்தார். இந்நிலையில் இந்த ஐபில் சீசனில் ஒரு போட்டிகளில் கூட சோபிக்காத வாட்சன் நேற்றைய ஆட்டத்தில் மிக சிறப்பாக விளையாடி 53 பந்துகளில் 96 ஓட்டம் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இறுதியாக சென்னை அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கான 176 ரன்களை எடுத்தது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இந்த சீசனில் 10 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட 50 ரன்களை கடக்காத வாட்சன் நேற்றைய ஆட்டத்தில் 96 ரன் எடுத்து சென்னை அணியின் வெற்றிக்கு பேருதவி புரிந்தார்.

IPL 2019

ஐபிஎல்., கிரிக்கெட் அரங்கில் சென்னை அணியின் தொடர் வெற்றிக்கும் மற்றும் தொடர்ச்சியாக பிளே ஆப் இடத்தை உறுதி செய்வதிலும் சென்னை அணி கில்லியாக உள்ளது குறித்த ரகசியம் குறித்து கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த தோனி கூறுகையில், ‘சென்னை அணிக்கு சில சமயம் தனி நபர் வெற்றித்தேடி தருகின்றனர். பல சமயத்தில் அணியாக வெற்றி பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. வாட்சன் ஒரு மேட்ச் வின்னர். சில போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் வாய்ப்பு வழங்க தகுதியானவர். 

சென்னை அணியின் வெற்றி மந்திரத்தை வெளியில் மற்றவர்களுக்கு சொன்னால், என்னை ஏலத்தில் அவர்கள் எடுக்கமாட்டார்கள். அது மிகப்பெரிய ரகசியம். ரசிகர்கள் மற்றும் நிர்வாகத்தின் ஆதரவு, மற்றும் சென்னை அணி பணியாளர்கள் என சென்னை அணியின் வெற்றியில் அனைவரின் பங்கும் உள்ளது. இதைத்தவிர நான் ஓய்வுபெறும் வரை வேறு எதையும் நான் சொல்லமாட்டேன்.’ என்றார்.