விளையாட்டு

இது என்ன சோதனை!! ஐபில் நெருங்கும் நிலையில் சென்னை அணிக்கு இப்படி ஒரு சோதனையா!!

Summary:

சென்னை அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேசல்வுட் விலகிய நிலையில் மாற்று வீரரை செ

சென்னை அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேசல்வுட் விலகிய நிலையில் மாற்று வீரரை சென்னை அணி நிர்வாகம் அறிவிக்க தாமதமாகிவருகிறது.

வரும் 9 ஆம் தேதி தொடங்க இருக்கும் ஐபில் போட்டிகளை முன்னிட்டு அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் சென்னை அணியில் இருந்து ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த பிரபல வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேசல்வுட் சமீபத்தில் விலகினார்.

தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிடவேண்டும் எனவும், அடுத்த 12 மாதங்களில் ஆஸ்திரேலியா அணி பல்வேறு சர்வேத போட்டிகளில் விளையாட உள்ளதால் அதற்கு தயாராகவேண்டும் எனவும் தனது வெளியேற்றம் குறித்து ஜோஸ் ஹேசல்வுட் விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில் ஜோஸ் ஹேசல்வுட் அணியில் இருந்து விலகியதை அடுத்து, அவருக்கு பதிலாக சென்னை அணி எந்த வீரரை தேர்வு செய்ய உள்ளது என்ற எதிர்பார்ப்பு சென்னை அணி ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. அதேநேரம், ஜோஸ் ஹேசல்வுட்க்கு பதிலாக சென்னை அணி நிர்வாகம் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளை சார்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் சிலரை தொடர்பு கொண்டதற்காகவும், ஆனால் அவர்கள் மும்பையில் அதிகரித்துவரும் கொரோனா பரவலை காரணம் காட்டி மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

சென்னை அணி விரைவில் மாற்று வீரரை அடையாளம் காணவேண்டிய சூழல் தற்போது உருவாகியுள்ளது.


Advertisement