இந்தியா விளையாட்டு

சிஎஸ்கே தான் செம மாஸ்.! ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் இதுவரை எந்தெந்த அணிகள் எந்த இடத்தில் உள்ளது? முழு விவரம்.!

Summary:

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கொரோனா பரவலுக

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கொரோனா பரவலுக்கிடையே, பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் இந்த ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் எதிர்பார்க்காத வகையில்,சென்னை அணி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 

அதேபோல் இந்த தொடரில் பெங்களூரு அணியும் பலமான அணியாக உள்ளது. இப்போது புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இவ்விரு அணிகளே மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் புள்ளிப் பட்டியலில் நேற்று சன்ரைசர்ஸ் அணியை வென்றதன் மூலம் சென்னை அணி 6 போட்டிகளில் 5 வெற்றி 1 தோல்வி என 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

இதற்கு அடுத்த படியாக அணி 6 போட்டிகளில் 5 வெற்றி 1 தோல்வி என 10 புள்ளிகளுடன் பெங்களூரு அணி இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் டெல்லி 8 புள்ளிகளுடனும், நான்காவது இடத்தில் மும்பை நான்கு புள்ளிகளுடன், 5-வது இடத்தில் கொல்கத்தா அணியும், 6-வது இடத்தில் பஞ்சாப் அணியும், அதற்கு அடுத்த படியாக ராஜஸ்தான் அணி 7-வது இடத்திலும், மற்றும் ஹைதராபாத் 2 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும் உள்ளது.


Advertisement