இந்த வருடம் ஐபிஎல் டி20 தொடர் நடக்குமா? நடக்காதா.? கூடுகிறது முக்கிய ஆலோசனை கூட்டம்!

Ipl meeting


Ipl meeting

இந்த வருடம் 13வது ஐபிஎல் டி20 தொடர் இந்த மாதம் மார்ச் 29ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், கொரோனா அச்சுறுத்தலினால்
ஐபிஎல் டி20 தொடர் போட்டித்தொடர் நடப்பது குறித்த ஆலோசனை குழு வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

சீன நாட்டின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இதுவரை 4000 கும் அதிமானோர் உயிர் இழந்துள்ள நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து இந்திய அரசாங்கமும் மக்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்திவருகிறது. இந்திய மக்களும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வருகின்றனர்.

ipl

இந்தநிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடப்பு ஆண்டு திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. வரும் 29 ஆம் தேதி தொடங்கி  மே 24 ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன. கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ஐபிஎல் போட்டிகளைக்காண மைதானங்களில் ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் கூடுவார்கள் என்பதால், பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் பிரிஜேஷ் படேல் தலைமையில் நடைபெறும் ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு கூட்டம் வரும் 14 ஆம் தேதி கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, அமித் ஷா மகன் ஜெய் ஷா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். ஐபிஎல் தொடர் குறித்து முக்கிய முடிவுகள் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் என கூறப்படுகிறது .