கிடைத்த வாய்ப்பை தவறவிட்ட விராட்கோலி! தடுமாறும் பெங்களூர் அணி!

கிடைத்த வாய்ப்பை தவறவிட்ட விராட்கோலி! தடுமாறும் பெங்களூர் அணி!


IPL 2019 Viratkohli missed second chance against to panjap

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 41 போட்டிகள் இதுவரை முடிந்துள்ள நிலையில் பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகள் இன்று விளையாடிவருகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன் மூலம் முதலில் பேட் செய்த பெங்களூர் அணியின் தொடக்க வீரர் பார்திவ் படேல் அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் 43 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.

பெங்களூர் அணியின் கேப்டன் விராட்கோலி 8 பந்துகளில் 13 ஓட்டம் எடுத்திருந்த நிலையில் சமீ வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் விராட்கோலி. இன்றைய ஆட்டத்தில் தனக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பையும் விராட்கோலி மிஸ் செய்துவிட்டார் என்றே கூறலாம்.

IPL 2019

ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை சமி வீசியபோது லெக் சைட் கேட்ச் கொடுத்தார் விராட்கோலி. ஆனால், அந்த கேட்சை பஞ்சாப் அணி வீரர் வில்ஜோன் தவறவிட்டுவிட்டார். ஒருவேளை வில்ஜோன் அதை பந்தை பிடித்திருந்தால் விராட்கோலி ஒரு ரன்னுடன் மட்டுமே வெளியேறியிருப்பார்.

தனக்கு கிடைத்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளாமல் சமி வீசிய அடுத்த ஓவரில் மண்டீப்பிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் விராட்கோலி. தற்போது 14 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 109 ரன் எடுத்து விளையாடி வருகிறது.