இந்தியா விளையாட்டு

பிறந்தநாளன்று ஆடிய ஆட்டத்தில் சோகமான சாதனைபடைத்த இந்தியவீரர்!.

Summary:

பிறந்தநாளன்று ஆடிய ஆட்டத்தில் சோகமான சாதனைபடைத்த இந்தியவீரர்!.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தனது பிறந்தநாளில் சோகமான சாதனை படைத்துள்ளார்.

எப்படியாவது வென்று ஆகவேண்டும் என்று இந்திய ரசிகர்கள் தீவிரமாக எதிர்பார்த்துவந்த, இங்கிலாந்து - இந்தியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் நடந்த நிலையில் இந்திய அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

 

இதில் தனது 30வது பிறந்தநாளை கொண்டாடிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா அவரது பிறந்தநாள் அன்று ஆடிய ஆட்டத்தில் டக் அவுட்டானார்.

இதன் மூலம் பிறந்தநாளில் டக் அவுட்டான மூன்றாவது இந்திய வீரர் என்ற சோகமான சாதனையை அவர் படைத்துள்ளார். அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால் இணையத்தில் அந்த சம்பவத்தை பகிர்ந்து வருகின்றனர்.


Advertisement