இந்திய கிரிக்கெட் அணியின் சீருடை அதிரடி மாற்றம்!! புதிய சீருடை என்ன நிறம் தெரியுமா??

இந்திய கிரிக்கெட் அணியின் சீருடை அதிரடி மாற்றம்!! புதிய சீருடை என்ன நிறம் தெரியுமா??


indian cricket team new dress


இந்தியா மற்றும்  ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட  டி20  தொடரில் 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வென்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. 

இந்தநிலையில், இந்தியா மற்றும்  ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறுகிறது. டி20  தொடரில் தோல்வியை தழுவியதால் ஒருநாள் தொடரை எப்படியாவது வென்றே ஆகவேண்டும் என்ற நோக்கில் இந்தியா அணியும், ரசிகர்களும் உள்ளனர். 

இந்தநிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம், இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய சீருடை அறிமுகம் செய்துள்ளது. இந்திய ஆண்கள்,பெண்கள் என இரு கிரிக்கெட் அணிக்கும் புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.