அடேங்கப்பா.. கிரிக்கெட் வீரர்களுக்கு இவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறதா?

பிசிசிஐ இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஆண்டுக்கு 1 கோடி முதல் 7 கோடி வரை ஊதியமாக வழங்குகிறது என்ற தகவல் வெளிவந்துள்ளது.
ஆரம்ப காலகட்டங்களில் கிரிக்கட் போட்டி என்றால் டெஸ்ட் போட்டிதான் பிரபலமாக இருந்தது. காலப்போக்கில் ஒருநாள் போட்டிகளை காண ரசிகர்கள் அதிக அளவில் திரண்டனர். ஆனால் தற்சமயம் அனைத்து ரசிகர்களும் டி20 போட்டிகளையே காண விரும்புகின்றன.
இந்நிலையில் இன்னும் ஒரு சில மாதங்களில் துவங்க இருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்களை ஜெய்ப்பூரில் நடந்த ஏலத்தின் மூலம் ஒவ்வொரு அணியின் உரிமையாளர்களும் தேர்வு செய்தனர். இதனால் ஐபிஎல் போட்டிகளை காண இப்போதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இவ்வாறு பல வழிகளில் இருந்தும் வரும் வருமானம் மூலம் உலகத்திலேயே மிகவும் பணக்கார கிரிக்கெட் போர்டாக ஐசிசியை அடுத்து பிசிசிஐ விளங்குகிறது. இதனால் மற்ற நாட்டு அணி வீரர்களை விட இந்திய வீரர்களுக்கு அதிகமான ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
பிசிசிஐ தனது வீரர்களை A+,A,B மற்றும் c ஆகிய கிரேடுகளில் பிரித்துள்ளது. அவர்களில் A+ கிரேடு வீரர்கள் ஆண்டிற்கு 7 கோடியை சம்பளமாக பெறுகின்றனர். A கிரேடு வீரர்கள் 5 கோடியும், B கிரேடு வீரர்கள் 3 கோடியும், c கிரேடு வீரர்கள் ஆண்டிற்கு 1 கோடியையும் சம்பளமாக பெறுகின்றனர்.
இவை தவிர ஒவ்வொரு ஆட்டத்திற்கும் பெறும் தொடர் நாயகன் விருது, ஆட்டநாயகன் விருது மற்றும் விளம்பர படங்களில் நடிக்கும் வருமானம் மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டிகள் மூலம் வருமானம் என்று ஒவ்வொரு வீரரும் ஒரு பெருந்தொகையை ஒவ்வொரு ஆண்டும் சம்பாதிக்கின்றனர்.