
indian cricket captan viraht
வெளிநாடு சுற்றுப் பயணத்தின்போது வீரர்களுடன் தங்கள் மனைவியையும் அனுமதிக்க வேண்டும் என்று பிசிசிஐ யிடம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இங்கிலாந்து பயணத்தின்போது இந்திய அணியின் வீரர்கள் தங்களுடன் மனைவி குழந்தைகள் மற்றும் உதவியாளர்கள் யாரையும் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்று பிசிசிஐ உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவு இதுவரை எந்த சுற்றுப்பயணத்தின் போதும் கடைபிடிக்கவில்லை.
இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வீரர்களுடன் தங்களது மனைவியை அனுமதிக்க வேண்டும் என்று அணி மேலாளரிடம் கடிதம் அனுப்பபட்டுள்ளது. அவர் இந்த கடிதத்தை பிசிசிஐ-க்கு அனுப்பியுள்ளார். பிசிசிஐ இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த நிர்வாகக் குழுவுக்கு அனுப்பி உள்ளது. அவர்கள் இதுதொடர்பாக தற்சமயம் எந்த முடிவும் எடுக்க மாட்டார்கள் என்று தெரிகிறது.
Advertisement
Advertisement