இந்தியா விளையாட்டு

ரோஹித் சர்மாவின் ஆக்ரோஷமான ஆட்டம்! பலி தீர்த்தது இந்திய அணி!

Summary:

india won bangaladesh team


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, T20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. தற்போது இரு அணிகளுக்கிடையேய T20 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றதால், இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற சூழ்நிலையில் ஆடியது.

இந்தநிலையில் இன்று நடந்த 2வது T20 போட்டி இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

இதனையடுத்து பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பத்தில் இருந்து சிறப்பாக ஆடிய வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் சிறப்பாக ஆடினர். ரோஹித் சர்மா 43 பந்துகளுக்கு 85 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். ஷிகர் தவான் 27 பந்துகளுக்கு 31 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். இதனையடுத்து இந்திய அணி 15.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றிபெற்றது. 
 


Advertisement