இந்தியா விளையாட்டு

204 ரன்களை 19 ஓவரில் அடித்து நொறுக்கிய இந்திய அணி..! ராகுல், ஷ்ரேயஸ் ஐயரின் அசத்தல் ஆட்டம்..!

Summary:

India vs New Zealand 2020 first T20 match update

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மோர்கொண்டுள்ள இந்திய அணி தற்போது T20 போட்டிகள் விளையாடிவருகிறது. இன்று நடந்த முதல் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய நியூசிலாந்து அணி தொடக்கத்தில் இருந்தே அபாரமாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்து.

204 என்ற கடினமான இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. 7 ரன்கள் எடுத்த நிலையில் ஹிட்மேன் ரோஹித் சர்மா ஆட்டம் இழந்தது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது. இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ராகுல் மற்றும் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை மளமளவென உயர்த்தினர்.

ராகுல் 56 ரன்களுடனும், விராட்கோலி 45 ரன்களுடனும் வெளியேற ஷ்ரேயஸ் ஐயர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இதனை அடுத்து 19 ஓவர்கள் முடிவில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 204 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது. 58 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்த ஸ்ரேயஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆஸ்திரேலிய அணியை ஓடவிட்டதை அடுத்து நியூசிலாந்து சென்ற இந்திய அணி அங்கும் தனது வெற்றியை பதிவு செய்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement