தொடக்கத்திலையே ஓட விடும் ஆஸ்திரேலியா அணி..! ரோஹித் அவுட்..! முட்டி மோதும் தவான் - ராகுல்..!



India vs Australia first odi match update

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது ஒருநாள் போட்டிகளில் விளையாடிவருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்துவரும் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற அவுஸ்திரேலிய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து இந்திய அணி தற்போது பேட்டிங் செய்துவருகிறது.

இந்திய அணி சார்பாக ரோஹித் சர்மா மற்றும் தவான் இருவரும் ஆட்டத்தை தொடங்கினர்.  முதல் மூன்று ஓவர்களில் நிதானமாக விளையாடிவந்த நிலையில் நான்காவது ஓவர் மூன்றாவது பந்தில் ஸ்டார்க் வீசிய பந்தில் வார்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ரோஹித் சர்மா.

ind vs aus

15 பந்துகளில், 10 ரன்கள் எடுத்து ரோஹித் சர்மா ஆட்டம் இழக்க, தற்போது தவான் - லோகேஷ் ராகுல் இருவரும் நிதானமாக விளையாடிவருகின்றனர். தற்போது 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 45 ஓட்டங்கள் எடுத்துள்ளது. தற்போதைய ரன் ரேட்: 4 .35 .லோகேஷ் ராகுல் 14 (9), தவான் : 25 (34).