தத்தளித்த இந்தியாவை கரை சேர்த்த புஜாரா! முதல் நாள் முடிவில் இந்திய அணி 250 ரன்கள்

தத்தளித்த இந்தியாவை கரை சேர்த்த புஜாரா! முதல் நாள் முடிவில் இந்திய அணி 250 ரன்கள்



India vs Aus 1st test day1

விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள  இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று காலை அடிலெய்டில் துவங்கியது.

test match

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி, பேட்டிங்கை துவங்கிய இந்திய அணியில், லோகேஷ் ராகுலும், முரளி விஜயும் துவக்க ஆட்டக்காரர்களா களம் இறங்கினர். ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் தடுமாறி இருவருமே கேட்ச் கொடுத்து வெளியேறினர்.

test match

அடுத்துவந்த விராட் கோலியும் மூன்று ரன்கள் எடுத்து கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். ரஹானே 31 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இந்த நிலையில் இந்திய அணி 21 ஓவர்கள் வரையிலும் 4 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் சேர்த்து தடுமாறியது. பின்னர் வந்த ரோகித் சர்மா சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடி 37 ரன்களில் அவுட்டானார். அவரைத்தொடர்ந்து வந்த பண்ட் மற்றும் அஸிவின் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 

test match

ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் சிறப்பாக ஆடிய புஜாரா சதமடித்தார். பின்னர் வந்த இஷாந்த் ஷர்மா 4 ரன்னில் அவுட்டாக அவரைத் தொடர்ந்து சிறப்பாக ஆடிய புஜாராவும் 123 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். 

test match

இந்நிலையில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்தது. சமி மற்றும் பும்ரா இன்னும் களத்தில் உள்ளனர்.