அடிசக்க.. U19 உலகக்கோப்பை T20 வெற்றி.. இந்திய மகளிர் அணிக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவித்த பிசிசிஐ செயலர்.!

அடிசக்க.. U19 உலகக்கோப்பை T20 வெற்றி.. இந்திய மகளிர் அணிக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவித்த பிசிசிஐ செயலர்.!



India U19 Team T20 World Cup Victory BCCI Prize Rs 5 Crore

 

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 19 வயதுக்குட்பட்ட இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, நேற்று டி20 உலகக்கோப்பை போட்டித்தொடரில் இறுதி ஆட்டத்தை விளையாடியது. தென்னாபிரிக்க மண்ணில் இந்தியாவும் - இங்கிலாந்து அணிகளும் மோதிக்கொண்டன. 

டாஸ் வென்ற இந்தியா பீல்டிங் தேர்வு செய்ததால், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 68 ரன்கள் மட்டுமே எடுத்து தனது மொத்த விக்கெட்டையும் இழந்து ஆல்-அவுட் ஆனது. அதனைத்தொடர்ந்து, 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. 

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 14 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்களை குவித்து வெற்றிவாகை சூடினர். இதனால் 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை பெண்கள் கிரிக்கெட்டில் இந்தியா வரலாற்று சாதனையுடன் வெற்றி அடைந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக முதல் முறையாக இந்திய அணி வெற்றி அடைந்தது.

India

இந்திய அணியின் சார்பில் விளையாடிய திரிஷா 29 பந்துகளில் 24 ரன்களும், சௌமியா திவாரி 37 பந்துகளில் 24 ரன்களும் அதிகபட்சமாக எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகை  செய்தனர். டிடஸ் சந்து ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், இந்திய மகளிர் கிரிக்கெட் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.

இதனை வெகுவாக பாராட்டியுள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, இந்திய அணி வீராங்கனைகள் மற்றும் அணியின் பணியாளர்களுக்கு மொத்தமாக ரூ.5 கோடி பரிசு அறிவித்து இருக்கிறார்.