Breaking#: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கான 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு!

Breaking#: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கான 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு!



IND vs wi second T20 delayed

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று இந்திய நேரப்படி மாலை 8 மணி அளவில் துவங்குவதாக இருந்தது. ஆனால் தற்பொழுது ஆட்டம் 2 மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முதல் போட்டி நடைபெற்ற டிரிடினன்டிலிருந்து இன்று போட்டி நடைபெறும் ST Kitts மைதானத்திற்கு வந்து சேரவேண்டிய முக்கியமான லக்கேஜ் வராததால் குறித்த நேரத்தில் ஆட்டம் துவங்குவதில் சிரம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிலவரப்படி இரண்டு மணி நேர தாமதத்திற்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் நேரப்படி மதியம் 12:30 மணிக்குள்ளும் இந்திய நேரப்படி இரவு 10 மணிக்குள்ளும் ஆட்டம் துவக்க வாய்ப்புள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.