விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிரடி மாற்றம்.. ஐசிசி புது ஐடியா!

Summary:

ICC plan to reduce test match days to four days

பொதுவாக கிரிக்கெட் போட்டி என்றாலே உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். T20 , ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி என மூன்று வகையாக கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகிறது. T20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் ஆர்வம் டெஸ்ட் போட்டிகளுக்கு இருப்பது இல்லை.

T20 போட்டிகள் வந்ததால்தான் டெஸ்ட் போட்டிகள் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு குறைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் டெஸ்ட் போட்டி மீதான ஆர்வத்தை அதிகரிக்க டெஸ்ட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை ICC நடத்திவருகிறது.

இந்நிலையில் வரும் 2023 முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை 4 நாட்களாக குறைக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது. இதன்படி நாள் ஒன்றுக்கு 90 ஓவர்களுக்கு பதிலாக 98 ஓவர்கள் வீச வேண்டும்.


Advertisement