என்ன மாதிரியான ஒரு நட்பு.. டோனி மற்றும் ரெய்னாவின் நட்பை பற்றி ஐசிசி வெளியிட்ட பரபரப்பு ட்வீட்.!

என்ன மாதிரியான ஒரு நட்பு.. டோனி மற்றும் ரெய்னாவின் நட்பை பற்றி ஐசிசி வெளியிட்ட பரபரப்பு ட்வீட்.!


icc-pays-tribute-to-ms-dhoni-suresh-raina-partnership

நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை 74 வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் தல டோனியின் ஓய்வு செய்தி கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்ப்படுத்தியது. எந்த வித முன்னறிவிப்பும் இன்றி தல டோனி அவர்கள் தனது ஓய்வை அறிவித்தார். அதனை தொடர்ந்து சின்ன தல சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தார்.

டோனி மற்றும் ரெய்னா இருவரும் ஓய்வு என அறிவிக்கப்பட்ட நேரத்திலிருந்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்து மற்றும் வருத்தத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஐசிசி டோனி மற்றும் ரெய்னாவின் பார்ட்னர்ஷிப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 


அதில் ஒருநாள் கிரிக்கெட்டில் இவர்கள் இருவரும் இணைந்து 73 இன்னிங்ஸ்களில் பார்ட்னர்ஷிப் அமைத்து 3,585 ரன்களை 56.90 சராசரியுடன் குவித்துள்ளதை குறிப்பிட்டு, 2011 உலக கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி பார்ட்னர்ஷிப்பையும் சுட்டிக் காட்டியுள்ளது. மேலும் இருவரும் கட்டித்தழுவியிருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.