விளையாட்டு

T20 உலக கோப்பை நிறைவடைந்து நாடு திரும்பிய வீரர்கள்.! வசமாக சிக்கிய ஹர்திக் பாண்ட்ய.! ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

Summary:

T20 உலக கோப்பை நிறைவடைந்து நாடு திரும்பிய வீரர்கள்.! வசமாக சிக்கிய ஹர்திக் பாண்ட்ய.! ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

7 வது T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியும், ஆஸ்திரேலியா அணியும் மோதியதில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று T20 உலக கோப்பையை முதன்முறையாக கைப்பற்றியது.

இந்த T20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியும் பங்கேற்றது. ஆனால் அரையிறுதியிக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றில் வெளியேறியது. இந்திய அணி சார்பில் விளையாடிய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு தொடர்ந்து போட்டியில் பங்கேற்பதில் தடை ஏற்பட்டது.

இந்த நிலையில், உலக கோப்பை போட்டிகள் நிறைவடைந்தன.  இதனால், துபாயில் இருந்து பாண்ட்யா நாடு திரும்பினார்.  அவரிடம் மும்பை சுங்க இலாகா அதிகாரிகள் பரிசோதனை செய்ததில் அவரிடம், பணம் செலுத்தியதற்கான உரிய ரசீதுகள் எதுவுமில்லாத 2 வாட்சுகள் இருந்தது தெரிய வந்தது.  இதனை தொடர்ந்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  அவற்றின் மதிப்பு ரூ.5 கோடி என கூறப்படுகிறது.  இதுதொடர்பாக அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement