விளையாட்டு

தோனியின் ஓய்வு குறித்து அதிர்ச்சி கருத்து கூறிய கவுதம் காம்பிர்! என்ன இப்படி சொல்லிட்டாரு!

Summary:

Gawtham gambir talks about dhoni

உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து முன்னாள் இந்திய அணியின் தொடக்க வீரர் கவுதம் காம்பிர் பதிலளித்துள்ளார்.

அவர் இதுபற்றி கூறுகையில், ஓய்வு அறிவிப்பு என்பது ஒரு வீரரின் தனிப்பட்ட முடிவு. அவர் ஓய்வு முடிவுக்கு வரும்வரை அவர் விளையாட எந்த தடையும் இல்லை. அடுத்த வருடம் நடக்க இருக்கும் 20 ஓவர்கள் உலகக்கோப்பையில் தோணி விளையாடுவாரா என்று நான் சிந்திக்கவில்லை.

அதேவேளையில் அந்த நேரம் இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கும் வீரர் இந்த வீரர் வேண்டும், இவர் வேண்டாம் என உறுதியாக சொல்லும் மனநிலையில் இருக்க வேண்டும் என்றும், தோணி பற்றி சிந்திப்பதை விட ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் போன்ற இளம் விக்கெட் கீப்பர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

தோனி அடுத்த உலகக் கோப்பை வரை விளையாட வேண்டியது இங்கு முக்கியம் அல்ல, அடுத்த உலகக் கோப்பையில் இந்தியா பட்டம் வெல்ல வேண்டும் இதுவே முக்கியம். மேலும் அடுத்த 4, 5 ஆண்டுகளில் புதுமுக வீரர்களை பட்டை தீட்ட வேண்டும் ஏனெனில் நாடு தான் முக்கியம், தோனி அல்ல.

இவ்வாறு காரசாரமாக பதிலளித்துள்ளார் கவுதம் காம்பிர்.


Advertisement