இந்திய வீரர்கள் கைக்கு வந்த கேட்ச்களை கோட்டை விட்டதை கிண்டலடித்த சுனில் கவாஸ்கர்.! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.?



gavaskar-talk-about-indian-team

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில் T20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி இரண்டாம் நாளான நேற்று அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்த 244 ரன்களை எடுத்தது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி நேற்று முதல் இன்னிங்சை துவக்கியது. ஆஸ்திரேலிய அணி 72.1ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.  இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 62 ரன்கள் முன்னிலையோடு உள்ளது. 

நேற்று நடந்த இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி பீல்டிங் செய்த போது நான்குக்கும் மேற்பட்ட கேட்ச்களை மிஸ் செய்தனர். நேற்றைய ஆட்டத்தில் சாஹா,பிருத்வி ஷா, பும்ரா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் கைக்கு வந்த கேட்ச்களை பிடிக்காமல் மிஸ் செய்தனர். மார்னஸ் லபுஷேன் கொடுத்த மூன்று கேட்ச் வாய்ப்புகளை இந்தியா தவற விட்டது இந்திய ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது.

இந்தநிலையில், கிறிஸ்துமசுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய வீரர்கள் கிறிஸ்துமஸ் பரிசு வழங்கி விட்டனர் என்று இந்திய வீரர்கள் ஏராளமான கேட்சுகளை கோட்டை விட்டது குறித்து சுனில் கவாஸ்கர் கிண்டலாக கூறியுள்ளார்.