தோனி செய்த தவறு; கண்டுகொள்ளாத அம்பயர்! வைரலாகும் வீடியோ

தோனி செய்த தவறு; கண்டுகொள்ளாத அம்பயர்! வைரலாகும் வீடியோ


Dhoni misses to cross the crease video

நேற்று அடிலய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோனி ரன் எடுக்க ஓடும் போது கிரீஸை தொடாமலே திரும்பிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. 

அடிலய்டில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது. தோனி தனக்கே உரித்தான ஸ்டைலில் கடைசி ஓவரில் சிக்சர் அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். 

முதல் போட்டியில் 100 பந்துகளில் தோனி அரைசதம் அடித்தது தான் இந்தியாவின் தோல்விக்கு காரணம் என பல தரப்பில் இருந்து விமர்சணங்கள் எழுந்தன. அத்தனை விமர்சணங்களுக்கும் தோனி தனது பேட்டிங் மூலம் இரண்டாவது ஒருநாள் போட்டியில் பதிலளித்தார். "நான் வீழ்வேன் என நினைத்தாயோ" என்ற வசனத்தை தோனியுடன் சேர்த்து ரசிகர்கள் உற்சாகமாக பகிர்ந்து வருகின்றனர். 

dhoni

தோனிக்கு சிறப்பாக அமைந்த அதே போட்டியில் அவர் ஒரு தவறினை செய்துள்ளார். அதனை அப்போதைக்கு அமபயர் மற்றும் வேறு யாரும் கண்டுகொள்ளவில்லை. ஒரு ரன் தானே என அதனை சிறு தவறாக எண்ணிவிட முடியாது. ஏனெனில் கிரிக்கெட்டை பெருத்தவரை ஒவ்வொரு ரன்னும் மிகவும் முக்கியமானது தான். 

நேற்றைய ஆட்டத்தில் லயான் வீசிய 45 ஓவது ஓவரின் கடைசி பந்தில் தோனி ஒரு சிங்கிள் எடுத்தார். அப்போது மெதுவாக நடந்து வந்த தோனி கிரீஸின் அருகில் வந்துவிட்டு கோட்டை தொடாமல் திரும்பிவிட்டார். அது ஓவரின் கடைசி பந்து என்பதால் அதனை யாரும் கவனிக்கவில்லை போலும். பின்னர் ரீப்ளே மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அடுத்த ஓவர் தொடங்கிவிட்டதால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.