போட்டிக்கு நடுவே மைதானத்தில் தோனி ரசிகர்கள் காண்பித்த போஸ்டர்.. வைரலாகும் புகைப்படம்..



Dhoni fans shows poster mid of match

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தல தோனி ரசிகர்கள் தோனிக்கு நன்றி தெரிவித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்துவருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 329 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்த நிலையில், இங்கிலாந்து அணி 134 ரங்களில் ஆட்டம் இழந்தது.

அதனைத்தொடர்ந்து தற்போது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்துவரும்நிலையில், இங்கிலாந்து அணியை விட 360 ரன்களுக்கு மேலாக முன்னிலை பெற்று பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் போட்டிக்கு இடையே மைதானத்தில் இருந்த தோனி ரசிகர்கள், தோனிக்கு நன்றி தெரிவித்து மைதானத்தில் காண்பித்த ஒரு போஸ்டர் (புகைப்படம்)  தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

dhoni

தோனி ஏற்கனவே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டநிலையில், தோனி மீதான தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக, "டியர் தோனி தேங்க்ஸ் பார் எவரித்திங்..”, “வி மிஸ் யூ” தல பார் எவர் என தோனியின் மீது உள்ள அன்பை வார்த்தைகளாக தெரிவித்து அதில் நன்றியை தெரிவித்து உள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.