மீண்டும் பேட்டினை கையில் பிடித்த தவானின் அதிரடி வீடியோ! மே.இ.தீவுகளுக்கு எதிராக ஆடுவாரா?

மீண்டும் பேட்டினை கையில் பிடித்த தவானின் அதிரடி வீடியோ! மே.இ.தீவுகளுக்கு எதிராக ஆடுவாரா?


dhawan-recovered-after-injury

இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் ஷிகர் தவான். உலகக்கோப்பை அணியில் இடம்பெற்ற இவர் ஆஸ்திலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார். 

கம்மின்ஸ் வீசிய பந்து தவானின் கட்டை விரலில் தாக்கியதால் ஏற்பட்ட காயம் நீண்ட நாடக்ளுக்கு முன்பு இப்போது தான் குணமாகியுள்ளது. கடந்த 15 ஆம் தேதி பெங்களூரு NCA மைதானத்திற்கு கையில் கட்டுடன் சென்ற தவான் U-19 வீரர்களுடன் உரையாடினர். அவர்கள் இங்கிலாந்தில் நடைபெறும் முத்தரப்பு தொடரில் ஆடவுள்ளனர். 

Shikar Dhawan

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தவான் கையில் கட்டினை பிரித்துவிட்டு இன்று முதல்முறையாக பேட்டிங் செய்துள்ளார். இன்று வலைபயிற்சியில் ஈடுபட்ட அவர் வீடியோ எடுத்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 

Shikar Dhawan

அதில், "காயத்திற்கு பிறகு இன்று தான் முதல்முறையாக பேட்டினை கையில் பிடிக்கிறேன். மீண்டும் வந்ததில் மிக்க மகிழ்ச்சி" எனக் கூறி பந்தினை சரியாக தண்ணீர் பாட்டில் மூடியில் அடிக்கிறார். இதைப் போன்றே செய்ய முடியுமா என யுவராஜ் சிங்கிற்கு #BottleCapChallage என்ற சேலஞ்சை வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடருக்கான வீரர்கள் பட்டியலில் இடம்பெறுவார் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.