எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தமா வச்சு செய்த சென்னை அணி.! இது தான் தோனி படை.! காலரை தூக்கும் சிஎஸ்கே.!

எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தமா வச்சு செய்த சென்னை அணி.! இது தான் தோனி படை.! காலரை தூக்கும் சிஎஸ்கே.!


csk-won-kings-11

ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடரின் 18 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் நேற்று மோதியது. துபாயில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களாக அந்த அணியின் கேப்டன் லோகேஷ் ராகுலும், மயங்க் அகர்வாலும் களமிறங்கினர்.

ஆரம்பத்திலிருந்து  நிதானமாக ஆடிய இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் தந்தனர். மயங்க் அகர்வால் 26 ரன்களில்ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய மன்தீப்சிங் 27 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து லோகேஷ் ராகுலும், நிகோலஸ் பூரனும் சிறப்பாக ஆடி16 ஓவர்களில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர்  நிகோலஸ் பூரன் 33 ரன்கள் எடுத்த நிலையிலும், லோகேஷ் ராகுல் 63 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர்.

csk

20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்து. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டும், ஜடேஜா, பியுஷ் சாவ்லா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் துவக்க வீரர்களான ஷேன் வாட்சனும், டு பிளிஸ்சிசும் ஆரம்பத்திலிருந்தே அபாரமாக ஆடினர். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. வாட்சன் 53 பந்துகளில் 83 ரன்களுடனும் (11 பவுண்டரி, 3 சிக்சர்), டு பிளிஸ்சிஸ் 53 பந்துகளில் 87 ரன்களுடனும் (11 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர். தொடர்ந்து 3 தோல்விகளுக்கு பிறகு சென்னை அணி அபார வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் சென்னை அணி தோல்வியடைதந்ததால் இந்த வெற்றி சென்னை ரசிகர்களை திருப்தி படுத்தியுள்ளது.