விளையாட்டு

அடுத்தடுத்து சரியும் சென்னை அணி வீரர்கள்! மாஸ் காட்டும் கைதராபாத்!

Summary:

CSK lost players against to srh

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை நடந்த 8 போட்டிகளில் வெற்றிபெற்று சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் ஐபில் 32 வது ஆட்டத்தில் கைதராபாத் அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டு விளையாடிவருகிறது சென்னை அணி.

இன்று இரவு 8 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்துகொண்டிருக்கும் சென்னை அணி முதல் 8 ஓவர்களில் சிறப்பாக விளையாடியது. சென்னை அணியின் தொடக்க வீரர்களாக இறங்கிய வாட்சன் மற்றும் டுப்ளஸி இருவரும் அதிரடியா விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

10 வது ஓவரில் வாட்சனும், 11 வது ஓவர் இரண்டாவது பந்தில் டுப்ளஸியும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அதனை தொடர்ந்து விளையாடிய ரைனா மற்றும் ராய்டு இருவரும் ஓரளவுக்கு விளையாட ரஷீத் வீசிய 14 வது ஓவரில் ரைனா மற்றும் ஜாதவ் இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அதனை அடுத்து களமிறங்கிய சாம் பில்லிங்ஸ் ரன் எடுக்காமல் ஆட்டம் இழந்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றாக சென்றுகொண்டிருந்த ஆட்டம் சென்னை வீரர்களின் அடுத்தடுத்த விக்கெட்டால் தற்போது சென்னை அணி தடுமாறிவருகிறது.


Advertisement