கடைசி 2 ஓவர்களில் தோனியின் வேட்டைக்காக காத்திருந்த ரசிகர்கள்.! ஏமாற்றத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்.!

கடைசி 2 ஓவர்களில் தோனியின் வேட்டைக்காக காத்திருந்த ரசிகர்கள்.! ஏமாற்றத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்.!


csk fans feel sad

15வது ஐபிஎல் சீசனின் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியும், சென்னை அணியும் மோதியது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது . பெங்களூரு அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய டு பிளசிஸ் ,விராட் கோலி ஆரம்பித்திலேயே அதிரடியாக விளையாடினர்.

சிறப்பாக ஆடிய பிளஸ்சிஸ் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனையடுத்து விராட் கோலி 30 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு173  ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி ஓரளவிற்கு நிதானமாக ஆடியது. அணியின் துவக்க வீரர் டேவான் கான்வே 37 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தநிலையில் ஆட்டமிழந்தார்.

சென்னை அணிக்கு கடைசி 2 ஓவர்களில் 39 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அணித்தலைவர் தோனி களத்தில் இருந்தார். இதனால் சென்னை அணி ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் தோனி 3 ரன்கள் எடுத்தநிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் பெங்களூரு அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.