விளையாட்டு

முரளிவிஜய் உட்பட அந்த 6 பேரை அணியில் இருந்து தூக்கியது சென்னை அணி.. யார் அந்த 6 பேர் தெரியுமா?

Summary:

சென்னை அணியில் இருந்து 6 வீரர்களின் ஒப்பந்தத்தை முடித்து அவர்களை அணியில் இருந்து விடுவித்துள்ளது சென்னை அணி நிர்வாகம்.

சென்னை அணியில் இருந்து 6 வீரர்களின் ஒப்பந்தத்தை முடித்து அவர்களை அணியில் இருந்து விடுவித்துள்ளது சென்னை அணி நிர்வாகம்.

2021 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான ஐபில் போட்டிகளை முன்னிட்டு, ஐபில் அணிகளுக்கான வீரர்களை தேர்ந்தெடுக்கும் மினி ஏலம் ஒன்றை வரும் பிப்ரவரி மாதம் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மினி ஏலத்தை பயன்படுத்தி ஐபில் அணிகள் தங்கள் அணியில் இருக்கும் சில வீரர்களை விடுவித்து, அந்த பணத்தை கொண்டு புது வீரர்களை தேர்ந்தெடுக்கும் திட்டத்தில் உள்ளது. அதன்படி சென்னை அணி தங்கள் அணியில் இருந்து 6 வீரர்களை விடுவித்துள்ளது.

கடந்த சீசனில் சென்னை அணி மிக மோசமான தோல்வியை சந்தித்ததை அடுத்து இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வாட்சன், ஹர்பஜன் சிங், கேதர் ஜாதவ், முரளி விஜய், பியூஸ் சாவ்லா மற்றும் மோனு சிங் ஆகிய 6 வீரர்களின் ஒப்பந்தத்தை முடித்து, அவர்களை அணியில் இருந்து விடுவித்துள்ளது சென்னை அணி நிர்வாகம்.


Advertisement