
bowler talk about sachin
உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் காரணமாக உலகில் எந்த விளையாட்டு போட்டிகளும் நடைபெறவில்லை. இதனால் அணைத்து விளையாட்டு வீரர்களும் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்தநிலையில் விளையாட்டு வீரர்கள் சமூகவலைத்தளங்களில் உரையாடி வருவது ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாக இருந்து வருகிறது.
அந்தவகையில், சச்சினை அவுட்டாக்கிய பின்பு தனக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாக நினைவுகூர்ந்துள்ளார் இங்கிலாந்து பவுலர் டி.எம் பிரெஸ்னன். இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் 99-வது சதத்தை 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அடித்திருந்தார் . அதன் பின்னர் நூறாவது சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.
99-வது சதம் அடித்து இரண்டு வருடங்களுக்கு பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 90 ரன்களை கடந்தார். 90 ரன்கள் எடுத்த பின்னர் நிதானமாக நின்று ஒவ்வொரு ரங்களாக சேர்த்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் சச்சின் 91 ரன்கள் எடுத்திருந்த போது இங்கிலாந்து அணியின் டிம் பிரஸ்ணன் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.
ஆனால் அப்போது உண்மையில் அந்த பந்து சச்சின் காலில்படவில்லை. பேட்டில் மட்டும் தான் பட்டது என பல சர்ச்சைகள் உருவானது. இந்நிலையில் இது குறித்து தற்போது மனம் திறந்து பேசியுள்ளார் டிம் பிரஸ்ணன். அவர் கூறுகையில், சச்சினை அவுட்டாக்கியது சந்தோஷமாக இருந்தது. ஆனால் வீட்டிற்கு சென்ற பின்னர் எனக்கு நிறைய போன்கால்கள் வந்தது. பலரும் கொலை மிரட்டல் விடுத்தார்கள் என கூறியுள்ளார்.
Advertisement
Advertisement