"தீவிரவாதத்தை தூண்டும் நாடுகளுடன் தொடர்பை துண்டிக்க வேண்டும்" இந்திய கிரிக்கெட் வாரியம் ICC-க்கு கடிதம்!

"தீவிரவாதத்தை தூண்டும் நாடுகளுடன் தொடர்பை துண்டிக்க வேண்டும்" இந்திய கிரிக்கெட் வாரியம் ICC-க்கு கடிதம்!



bcci-asks-icc-and-ecb-for-robust-security

புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்த சூழலில் வரும் மே மாதம் துவங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுடனும் விளையாடக் கூடாது என இந்திய ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் சார்பாக பல்வேறு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

வரும் மே மாதம் இறுதியில் இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்க இருக்கிறது. இந்த தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் ஜூன் 16ஆம் தேதி இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. ஐசிசி தரப்பில் இந்த போட்டியை ரத்து செய்வது குறித்து எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. எனவே இந்த போட்டி நடைபெறும் என்பது போல் தான் தெரிகிறது. ஆனால் ஐசிசியில் உறுப்பினராக உள்ள பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்திய மண்ணில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 

cricket

இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை போட்டிகளுக்கு தங்களது எதிர்பார்ப்புகளை இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், "இந்திய மண்ணில் சமீபத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலால் 44 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை தொடர்ந்து எதிர்வரும் கிரிக்கெட் தொடரின் போது இந்திய வீரர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும்.

cricket

தீவிரவாதத்தை வளர்த்து விடக்கூடிய நாடுகளுடன் கிரிக்கெட் போட்டியின் மூலம் கொண்டுள்ள நட்புறவை அனைத்து நாடுகளும் கைவிட வேண்டும்; தங்களுடைய எதிர்ப்புகளை அவர்களுக்கு காண்பிக்க வேண்டும். எதிர்வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாதுகாப்பினை ஐசிசி மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகரிக்க வேண்டும். கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காக ICC மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்தை உருவாக்கும் என பிசிசிஐ நம்பிக்கை வைத்துள்ளது" என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.