மெட்ரோ ரயிலில் பெண்கள் பகுதியில் நுழைந்த பாம்பு! அலறிய பெண்கள் கூட்டம்..! வைரலாகும் காணொளி...

டெல்லி மெட்ரோ ரயிலில் பாம்பு புகுந்ததாக கூறும் ஒரு காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், பெண்கள் பயணிக்கும் பெட்டியில் பாம்பு ஒன்று இருப்பதாக பயணிகள் அலறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
வீடியோ வைரல் ஆன பின்னணி
இந்த வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, பலரும் இது உண்மையான சம்பவம் என நம்பி அதைப் பகிர்ந்து வருகின்றனர். கடந்த சில நாட்களில் பாம்புகள் தொடர்பான வீடியோக்கள் அதிகம் பகிரப்பட்டுள்ள நிலையில், இதுவும் அத்தகைய ஒன்றாக மாறியுள்ளது.
DMRC வெளியிட்ட விளக்கம்
இக்காணொளி குறித்து டெல்லி மெட்ரோ ரெயில்வே கார்ப்பரேஷன் (DMRC) முக்கியமான விளக்கத்தை வழங்கியுள்ளது. பயணிகள் அளித்த தகவலின் பேரில், அந்த மெட்ரோ ரயில் உடனடியாக மெட்ரோ நிலையத்தில் நிறுத்தி காலி செய்யப்பட்டது. பின்னர், பாதுகாப்பு நடவடிக்கையாக அந்த ரயில் டெப்போவிற்கு அனுப்பப்பட்டு முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: பெண்ணிடம் திடீரென கோபத்துடன் சீரி எழுந்த கடிக்க வாயை பிளந்த ராஜ நாகம்! இடையில் அது மட்டும் இல்லாட்டி அவ்வளவுதான்! பதறவைக்கும் வீடியோ காட்சி..
உண்மையில் நடந்தது என்ன
ஆய்வின் போது பாம்பு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், ஒரு சிறிய பல்லி மட்டும் உள்ளே இருந்தது என DMRC தனது X (முன்னர் ட்விட்டர்) பதிவில் அறிவித்துள்ளது.
சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ உண்மைதானா
இந்நிலையில், பெண்கள் பயந்து அலறும் அந்த காணொளி தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது
இதையும் படிங்க: இரண்டு தலை, மூன்று கண்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி! வைரலாகும் அதிசய காணொளி....