கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப செய்தி வழங்கிய பிசிசிஐ..!Bcci announced good news for cricket fans

கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்தால் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கி கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் உள்ளிட்ட எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளும் நடைப்பெறவில்லை.

இதனால் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் கிரிக்கெட் பேட்டிகளை தொலைக்காட்சியில் பார்க்க முடியாமலும், விளையாட முடியாமலும் இருந்து வருகின்றனர். அதனால் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் மகிழ்விக்கும் நோக்கில் பிசிசிஐ இன்ப செய்தி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

BCCI

அதாவது 2000 முதல் 2005 ஆம் ஆண்டு வரை இந்திய அணி பங்கேற்ற முக்கியமான பேட்டிகளின் ஹைலைட்டை நாளை முதல் டிடி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்ப உள்ளது.