அய்யோ பாவம்.. 11 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த வாய்பை நழுவ விட்ட ஃபவாத் ஆலம்!

அய்யோ பாவம்.. 11 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த வாய்பை நழுவ விட்ட ஃபவாத் ஆலம்!



Bawat alam suck out after 11 years

பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று சௌத்தம்பட்டில் துவங்கியது.

இந்த போட்டியில் பாக்கிஸ்தான் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. ஷதாப் கான் நீக்கப்பட்டு, பேட்ஸ்மேன் ஃபவாத் ஆலம் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். 2009ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஃபவாத் ஆலம், முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். அதன்பின்னர் அதே ஆண்டில் மேலும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடினார். 

pak vs eng

அதற்கு பின்னர் 11 ஆண்டுகளாக அவருக்கு பாக்கிஸ்தான் டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒருவழியாக நேற்று துவங்கிய இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஃபவாத் ஆலமிற்கு வாய்ப்பு கிடைத்தது.

நேற்றைய போட்டியில் ஆறாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஃபவாத் ஆலம் வெறும் 4 பந்துகள் மட்டுமே சந்தித்து வோக்ஸ் பநதில் எல்பிடபுல்யூ மூலம் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டானார். 11 ஆண்டுகளுக்கு பின்பு கிடைத்த வாய்ப்பை ஃபவாத் தவறவிட்டது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.