என்ன நடந்தால் என்ன? ஜெயிப்பது மட்டுமே முக்கியம்...! ஓட்ட பந்தயத்தின் போது திடீரேன மலம் கழித்து... கால்களில் வழிந்தும் நிற்காமல் ஓடிய வீராங்கனை! அதிர்ச்சி வீடியோ...!!!
சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற பிரபல ஹைராக்ஸ் போட்டி தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜோனா வீட்ஸிக், ஓட்டத்தின் போது உடல்நலக் கட்டுப்பாட்டை இழந்த நிலையிலும் போட்டியை நிறுத்தாமல் தொடர்ந்து ஓடியதாக கூறப்படுகிறது. இதனால் ஓடுதளத்தில் சுகாதாரப் பிரச்சினை ஏற்பட்டதாக சக வீரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
போட்டியை நிறுத்தாமல் ஓடிய வீராங்கனை
ஓட்டப்பந்தயத்தின் போது ஏற்பட்ட கடுமையான உடல் உழைப்பு மற்றும் அழுத்தத்தின் காரணமாக ஜோனா வீட்ஸிக்கிற்கு திடீரென கட்டுப்பாடற்ற முறையில் மலம் கழித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அவர் பந்தயத்தில் இருந்து விலகாமல் தொடர்ந்து ஓடி, போட்டியை நிறைவு செய்தார்.
இதையும் படிங்க: 8 மணிக்கு தொடங்கும் அதிரடி ஆட்டம்! கோப்பையை வெல்ல இந்தியா–இலங்கை பலப்பரீட்சை!
அவர் ஓடிய பாதையில் கழிவுகள் சிதறியதால் தரை வழுக்கும் நிலைக்கு மாறியதாகவும், பின்னால் வந்த சில வீரர்கள் நிலைதடுமாறி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர்களின் ஓட்ட வேகம் மற்றும் செயல்திறன் பாதிக்கப்பட்டதாக சக போட்டியாளர்கள் குற்றம்சாட்டினர்.
ஓடுதளம் மூடப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது
போட்டி முடிந்ததும் பாதிக்கப்பட்ட பகுதி முழுமையாக மூடப்பட்டது. அங்கிருந்த கார்ப்பெட்டுகள் மாற்றப்பட்டதுடன், கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
https://www.instagram.com/reel/DdOm0wkitJ7/?utm_source=ig_web_copy_link&stkn=NTc4MTIwNjQ2YQ==
சுகாதாரக் காரணங்களால் ஏற்பட்ட இந்த நிலைமை தெரிந்தும் வீராங்கனையை போட்டியில் இருந்து ஏன் விலக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. குறிப்பாக, சக வீரர்களின் பாதுகாப்பு மற்றும் போட்டி விதிமுறைகள் குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் தீவிரமடைந்துள்ளது.
‘ஜெயிப்பது மட்டுமே முக்கியம்’ என பதிவு
இதற்கிடையே, ஜோனா வீட்ஸிக் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் “ஜெயிப்பது மட்டுமே முக்கியம்” என்ற கருத்தை பதிவிட்டதாக கூறப்படுகிறது. அந்த பதிவு வெளியானதைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன. Joanna Wietzig தொடர்பான இந்த விவகாரம், போட்டி ஒழுங்கு மற்றும் விளையாட்டு வீரர்களின் பொறுப்பு குறித்த விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.