ரவிசந்திரன் அஸ்வின் உட்பட மூன்று வெளிநாட்டு வீரர்கள் திடீர் நீக்கம்!

ரவிசந்திரன் அஸ்வின் உட்பட மூன்று வெளிநாட்டு வீரர்கள் திடீர் நீக்கம்!


Aswin and 3 players removed

ரவிசந்திரன் அஸ்வின் உட்பட மூன்று வெளிநாட்டு வீரர்கள் ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக யார்க்‌ஷைர் அணி தெரிவித்துள்ளது.

சீனாவின் உகான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை  ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் லட்ச கணக்கானோர் பலியாகி உள்ளனர்.

aswin

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூலை 1 வரை தொழில்முறை கிரிக்கெட் ஆட்டங்களுக்குத் தடை விதித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். தற்போது டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடி வருவதால் அதிக அளவில் ஓய்வு கிடைக்கிறது. இந்த நேரத்தை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள திட்டமிட்ட அஸ்வின், இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்ட்டி போட்டியில் விளையாட முடிவு செய்தார்.

இந்த கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டி 2020, ஏப்ரல் 12 முதல் ஆரம்பமாக இருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அஸ்வின், கேஷவ் மஹாராஜ், நிகோலஸ் பூரான் ஆகிய மூன்று வெளிநாட்டு வீரர்களின் இந்த ஆண்டுக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது யார்க்‌ஷைர் கவுண்டி அணி.