என்னுடைய 10 விக்கெட் சாதனைக்கு அவர்தான் முக்கிய காரணம்.. அணில் கும்ப்ளே பெருமிதம்!

என்னுடைய 10 விக்கெட் சாதனைக்கு அவர்தான் முக்கிய காரணம்.. அணில் கும்ப்ளே பெருமிதம்!


anil-kumble-talks-about-srinath-handy-on-10-wickets-rec

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளரான அணில் கும்ப்ளே 1999 ஆம் ஆண்டு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். இங்கிலாந்தை சேர்ந்த ஜிம் லேக்கருக்கு பிறகு இந்தியாவின் அணில் கும்ப்ளே தான் இந்த சாதனையை செய்துள்ளார்.

தற்போது அஸ்வினுடன் ஆன்லைன் மூலம் பேசிய கும்ப்ளே அந்த சாதனை குறித்து பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "பத்து விக்கெட்டுகளை நாமே வீழ்த்துவோம் என்று அப்போது நினைத்து பார்க்கவில்லை. ஆனால் அடுத்தடுத்து விழுந்த விக்கெட்டுகள் மூலம் 9 விக்கெட்டுகள் கிடைத்தது. அடுத்த ஓவரை ஸ்ரீநாத் வீசினார். எல்லைக்கோட்டில் நான் பீல்டிங் செய்த போது ரசிகர்கள் நான் 10 விக்கெட்டினை வீழ்த்துவேன் என ஆசீர்வதித்தனர்.

Anil kumble

சிறந்த வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீநாத் அவருடைய ஓவரில் விக்கெட் கிடைத்துவிட கூடாது என்பதற்காகவே அகலப்பந்துகளை வீச முற்பட்டார். எப்போதும் ஸ்டம்பை நோக்கியே பந்துவீச பழகிவிட்டு திடீரென அகலபந்து மட்டுமே வீச வேண்டும் என்பது மிகவும் சிரமமான ஒன்று தான்.

இருப்பினும் அந்த ஓவரில் ரமேஷிடம் ஒரு கேட்ச் வாய்ப்பு சென்றது. ஆனால் அணி வீரர்கள் அனைவரும் பிடிக்க வேண்டாம் என கத்தினர். அதிர்ஷ்டவசமாக பந்து அவரை விட்டு விலகியே விழுந்தது. 

ஒருவழியாக அடுத்த ஓவரில் வாசிக் அக்ரமின் விக்கெட்டை வீழத்தி என்னால் அந்த சாதனையை படைக்க முடிந்தது. இது ஒட்டுமொத்த அணியின் கூட்டு முயற்சியால் கிடைத்த சாதனை" என கும்ப்ளே பெருமிதமாக பகிர்ந்துள்ளார்.