விளையாட்டு

யாரு சாமி நீங்க.! டி20 உலகக்கோப்பையில் மரண மாஸ் காட்டிய அணி.! அரண்டுபோய் நிற்கும் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள்.!

Summary:

யாரு சாமி நீங்க.! டி20 உலகக்கோப்பையில் மரண மாஸ் காட்டிய அணி.! அரண்டுபோய் நிற்கும் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள்.!

டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகள் மோதின. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடியதால், அணியின் எண்ணிக்கை ஆரம்பத்திலேயே கிடுகிடுவென அதிகரிக்க துவங்கியது. 

இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. நேற்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 13 பவுண்டரிகள் 11 சிக்சர்களை விளாசியது. இதனையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 10.2 ஓவர்கள் வரை மட்டும் தாக்குப்பிடித்து 60 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 130 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. 

டி20 உலகக்கோப்பையில் நடைபெற்ற ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணியை சொற்ப ரங்களில் ஊதி தள்ளிய ஆப்காஸ்தான் அணி, பிரிவு 2ல் உள்ள மற்ற அணிகளுக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளது என்றே சொல்ல வேண்டும். நெட் ரன் ரேட்டில் நம்பர் 1 நிலையில் இருக்கும் ஆப்கான் அணியை பிரிவு 2ல் உள்ள இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் அசால்டாக எடுத்து கொள்ளாமல் கவனமாக எடுத்து கொள்ள வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.


Advertisement